Saturday 4th of May 2024 07:20:46 AM GMT

LANGUAGE - TAMIL
-
பிரபல இயக்குனரின் திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி!

பிரபல இயக்குனரின் திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி!


பல தளங்களில் பயணிக்கும் ஆர்.ஜே.பாலாஜிக்கு தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. கிராஸ் டாக் மூலம் பிரபலமான இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடிதான் திரைப்படம் மூலம் திரைத்துறையில் நுழைந்தார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் தரமான படைப்புகளை கொடுத்து வரும் இயக்குனர் ராமின் அடுத்த திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி மற்றும் பேரன்பு உள்ளிட்ட தரமான படைப்புகள் மூலம், தமிழ் சினிமாவை அடுத்த தளத்திற்கு எடுத்து சென்றவர் இயக்குனர் ராம். இவரின் இயக்கத்தில் கடைசியாக மம்முட்டி நடிப்பில் பேரன்பு திரைப்படம் வெளியானது.

இந்நிலையில் தற்போது ஆர்.ஜே.பாலாஜி அடுத்ததாக நடிக்கவுள்ள திரைப்படத்தை ராம் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Category: சினிமா, புதிது
Tags: இந்தியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE